சனி, 27 ஜூன், 2009

இனிய இல்லறம்

''எங்க வீடுன்னா உங்களுக்கு ஒரு இளக்காரம்! எப்பவும் இப்பிடித்தான். எங்க பிரபா கல்யாணத்துக்குக்கூட பெரிய்ய வி.ஐ.பி மாதிரி சரியா தாலி கட்டுற நேரத்துக்குத்தான் வந்தீங்க..''

ஆரம்பித்து விட்டாள் பிருந்தா! எரிச்சலாக இருந்தது தனேசுக்கு.

''அது எவ்வளவு 'டைட்' ஆன டைம்னு உனக்கே தெரியும். ஆபீஸ்ல ஆடிட்டிங் நடந்துட்டு இருந்தது. அந்த சமயத்துல நான் கல்யாணத்துக்கு வந்ததே பெரிய விஷயம்.. இதை நான் உன்கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன்..'' - குரலில் உஷ்ணம் காட்டிச் சொன்னான் தனேஷ்.

''ஆமா.. பெரிய டைட். உங்க ஆபீஸ் வேலை எப்பதான் லூஸா இருந்திருக்கு? பிறந்த வீட்டுல வச்சு அவமானப்பட்ட நான்தான் லூசு. ஊரே கேட்டுச்சு.. 'பிருந்தா மாப்பிள்ளை வரலையா?'னு!''

இரண்டு வருடம் முன்னால் நடந்து முடிந்த பிருந்தாவின் தங்கை பிரபாவின் கல்யாணம், இன்று வரையிலுமே பல சண்டைகளுக்கான அஸ்திவாரமாக இருக்கிறது.

''எங்கம்மாவுக்கு நாலு நாளா காய்ச்சல். என்ன ஏதுனு ஒரு போன் போட்டு விசாரிங்களேன்.. குறைஞ்சா போய்டுவீங்க?'' என்று அவள் காலையில் சொல்ல,

''காய்ச்சல்தானே பிருந்தா.. சரியாகிடும். இதைப் போய் நான் என்னனு விசாரிக்க? நீ கேட்டிருப்ப இல்ல..'' என்று இவன் பதில் சொல்ல..

''உங்கம்மாவுக்குப் போன வாரம் அடிபட்டதே.. அதை மட்டும் கேக்கத் தெரியுது. எங்க அம்மான்னா..'' என்று துவங்கி, அவள் பேசியது.. இல்லை.. கத்தியதுதான் முதல் பாரா! திட்டத் துவங்கி விட்டால்.. வாயில் என்ன வருகிறது என்பதுகூடத் தெரியாது பிருந்தாவுக்கு!

எதற்கும் எதற்கும் முடிச்சுப் போடுகிறாள்? பாவம்.. வயதான காலத்தில் பாத்ரூமில் விழுந்து அடிபடுவதும், நாலு நாள் காய்ச்சலும் சமமா? அடிபட்டுக் கிடக்கும் அம்மாவைப் போய்ப் பார்த்து வரக்கூட நேரம் இல்லாமல் வேலை வேலை என்று கிடக்கிறவனிடம் பேசுகிற பேச்சா இது? இருந்தாலும் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி கேட்டான்..

''அம்மாகிட்ட பேசினியா பிருந்தா? 'பிருந்தாவைப் பேசச் சொல்லுப்பா'னு சொன்னாங்க. கீழ விழுந்ததுல நல்ல அடி.. பாவம்!'' - இவ்வளவுதான் சொன்னான். ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாள்.

''எதுக்கு விசாரிக்கணும்? இல்ல.. எதுக்குனு கேக்குறேன். சின்னதா ஒரு அடி.. அதுக்கு அவங்க அங்கருந்து டிராமா பண்றாங்க. நீங்க இங்கருந்து துடிக்கறீங்க.. கேமரா முன்னாடி நடிச்சா, ஆஸ்கர் கெடைக்கும்!''

இதற்கு மேல் அந்த இடத்தில் ஒரு விநாடி இருந்தாலும் பூகம்பம் வெடிக்கும் என அவனுக்குத் தெரியும். சட்டையை எடுத்து மாட்டியவன், விட்ட ஒரே உதையில் ஸ்டார்ட் ஆனது பைக்!

காலையில் குளிக்காமல்.. சாப்பிடாமல்.. கிளம்பிப் போனவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இரவு எட்டு மணி வரை வீம்பாக இருந்த பிருந்தாவுக்கு அதற்கு மேல் நிலைகொள்ளவில்லை. கோபமாகக் கிளம்பிப் போனாரே.. அந்தக் கோபத்தையெல்லாம் வண்டியை ஓட்டுவதில் காட்டி.. எங்காவது விழுந்து.. நினைவே உலுக்கிப் போட்டது.

வேக வேகமாக செல்போனை அழுத்தினாள்.. 'ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது' என்று வந்த பதிவு செய்யப்பட்ட குரல், அவள் பயத்தை அதிகப்படுத்தியது. தனேஷின் அலுவலகத்துக்கு போன் செய்தால் அடித்துக் கொண்டே இருந்தது.

மணி ஒன்பதாகி.. பத்தும் ஆக.. பதறிப் போனாள் பிருந்தா. எத்தனை கோபம் என்றாலும் இவ்வளவு நேரமாக வராமல் இருக்க மாட்டாரே!

''கடவுளே.. என் புருஷனை பத்திரமா மீட்டு வந்து குடுத்தா 108 தேங்கா உடைக்கிறேன்!'' என்று வேண்டுதலும் விம்மலுமாய் நேரம் கரைந்து கொண்டிருந்தபோதுதான் அவளுடைய செல்போன் ஒலித்தது.. அவள் தம்பியின் பெயரைக் காட்டியபடி! இந்த நேரத்தில் இவன் ஏன் போன் செய்கிறான்? ஒருவேளை இவருக்கு ஏதாவது ஆகி.. இவனுக்கு தகவல் போய்.. கடவுளே..

''ஹலோ..'' என்று சொல்ல நினைத்தாளே தவிர, கேவல்தான் முந்திக் கொண்டு வந்தது. மறுமுனையில் ஹலோ சொன்னது தம்பி அல்ல.. தனேஷ்! அவன் குரலைக் கேட்டதும்தான் உயிரே வந்தது அவளுக்கு.

நடந்தது என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டவளுக்கு அத்தனையும் கனவு போலதான் இருந்தது! வேலை விஷயமாக திடீரென்று கிளம்பி சென்னை வந்த அவள் தம்பி, ஒரு விபத்தைச் சந்தித்ததும், அரை மயக்கத்தில் அவனே போன் பண்ணி தனேஷை அழைத்ததும், தனேஷ் போய் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டதும்..

வீட்டுக்கு வருகிறவர், போகிறவரிடமெல்லாம் சொல்லிச் சொல்லி மாய்கிறார் பிருந்தாவின் அப்பா..

''பிருந்தா மாப்பிள்ளைதான் சரியான நேரத்துக்கு ஆஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப் போயிருக்கார். லேட்டா போயிருந்தா ரத்தம் நிறைய வீணாப் போயிருக்குமாம். அது பெரிய ஆஸ்பிடல் இல்லியா? ஒடனே அம்பதாயிரம் ரூபா கட்டணும்னு சொன்னாங்களாம். பணத்தைப் பொரட்டி, கட்டி, ஆபரேஷன் பண்ணினா நடக்கவே முடியாம போய்டுமோனு பயந்தவனுக்கு ஆறுதல் சொல்லி, எங்களுக்கும் பதமா போனைப் பண்ணி வர வச்சு.. இவரு எங்களுக்கு மருமகன் இல்ல.. மகன்!''

'தன் குடும்பத்தின் மேல் துளிக்கூட அக்கறை இல்லை' என்று தான் முந்தின தினம்தான் குற்றம் சாட்டிய கணவனைப் பற்றி உருகி உருகி தன் தந்தை பேச, குற்ற உணர்வு தாங்காமல் அவள் கன்னங்களில் வழிந்தோடியது கண்ணீர்.
'என் கணவர் இத்தனை அன்பு நிறைந்தவரா? இல்லை இல்லை.. அன்பே உருவானவரா? இத்தனை நல்ல இதயத்தையா இந்த அளவுக்குக் காயப்படுத்தி இருக்கிறேன்! என்னென்ன வார்த்தைகளையெல்லாம் பேசியிருக்கிறேன்! ச்சே! நானெல்லாம் என்ன ஜென்மம்!'

அழுது கொண்டே இருக்கிறாள் பிருந்தா.

அவளுக்காவது பரவாயில்லை.. தனேஷைப் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்படிக்கூட ஒரு வாய்ப்பு கிடைக்காமல் எத்தனை கணவர்களோ! எத்தனை மனைவிகளோ!

நாம் எப்படிப்பட்ட துணை? யோசிப்போம்!

புதன், 24 ஜூன், 2009

காதல் டூயட்



''
போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்னா என்னனு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா..!'

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..!''

- தன் மொபைல் மியூசிக் ஃபைலில் இருக்கும் 'டூயட்' பட பாடல் வரியை கேட்கும்போதெல்லாம், தன் கூர்நாசியை கண்ணாடியில் பார்த்து சிலிர்த்துக் கொள்வாள் தீபிகா. தாவணி போட்ட நாளில் இருந்தே தன் வருங்காலக் கணவன் குறித்து கலர் கலராக கனவுகள் சுமந்தவள். சூரியக் குமாரனாக அவன் வருவான்; திகட்டத் திகட்ட காதல் தருவான்; 'தீபு' என்ற வார்த்தையையே திருவாசகமாய் ஒலிப்பான்; தினம் தினம் நம் நாட்கள் திருவிழாவாக நகரும் இப்படியெல்லாம் நினைப்பில் மிதந்தவளுக்கு வந்த வரன்தான் குமரன்.

நிச்சயதார்த்தம் முடிந்தபின் துளிர்த்த அவர்களின் செல்பேசி உரையாடல்களின் பெரும்பகுதியில் ஷேர் மார்கெட், அமெரிக்க தேர்தல் பற்றியெல்லாம் பேசி தீபிகாவின் கனவில் அவன் தீ மூட்டியபோதும், காலங்கள் மாறும், தனக்கு கணவனானபின் குமரன் காதல் நோய்க்கு ஆளாவான் என்றெண்ணி அவனைக் கைபிடித்தாள்.

மாங்கல்ய கயிற்றின் புது மஞ்சள் சாயம் மாற ஆரம்பித்திருந்தது. ஆனால், தீபிகாவின் எதிர்பார்ப்புகளும் குமரனும் தனித்தனியேதான் இருந்தனர். அவள் முகத்தின் முன் வந்து விழுந்த கற்றை முடியை அவன் தன் விரலால் ஒதுக்கிவிடவில்லை. அலுவலகம் முடிந்து வரும்போது, அவள் கண் பொத்தி விளையாட்டு காட்டியதில்லை. ஊரே உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் மூழ்கிக்கிடந்த இரவுகூட, காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கோட்பாடுகளை கரைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவள் ஆசை ஆசையாக சமைத்துப் போட்டதை, நியூஸ் சேனல்கள் பார்த்தபடியே மென்று விழுங்கினான்.

தீபிகாவுக்கு நித்தமும் ஏமாற்றமாகக் கழிந்தது. ஆக, இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதுகள் அவளுக்கு அர்த்தமற்றதாகத் தோன்றின. தான் நூறு சதவிகிதம் அவனைக் காதலிப்பதாகவும், ஆனால் ஒரு சதவிகிதம்கூட அது தனக்கு திரும்ப கிடைக்கவில்லை என்றும் ஒரு மாய எண்ணத்தை மனதுக்குள் மெள்ள வளர்த்தெடுத்தாள்.

ஒரு இரவு நேரத் தனிமை. 'தீபு' என்று கைபிடித்தான் குமரன். தீபு... இத்தனை நாட்களாக அவனிடமிருந்த அவள் எதிர்பார்த்துக் கிடந்த அந்த ஒற்றை வார்த்தை. ஆனால், அந்த சூழ்நிலையில் அதற்குக் கிடைக்கவேண்டிய அன்பும் அங்கீகாரமும் அஸ்தமித்துப் போயிருக்க, சட்டென அவன் கைகளை உதறியவளின் குரல் விசும்பலானது.

''போதும் உங்கள கட்டிக்கிட்டு நான் படற அவஸ்தை. காதல்னா என்னனு தெரியாத ஜென்மம். எத்தனை ஆசையோட, எதிர்பார்ப்போட இருந்தேன் தெரியுமா. எல்லாம் போச்சு...'

'என்னம்மா பிரச்னை.. இங்க வா..'' - எட்டி அமர்ந்திருந்தவளை இழுக்க முற்பட்டான்.

''ஒண்ணும் வேண்டாம்.. தேவைனா மட்டும் அன்பா பேசற மாதிரி நடிக்காதீங்க'' - சுருங்கிப் போனான் குமரன். அன்றிலிருந்து அவர்கள் பஞ்சணையில் காற்று வீசியது. காதல் கரைந்து கொண்டே போனது.

இருந்தாலும் நல்லவேளையாக அடுத்தடுத்த பிரளயங்கள் வெடிக்கவில்லை. சிறுவயதிலிருந்தே எதையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதால், பொறுமையாகவே இருந்தான். எங்கே நிகழ்ந்தது அந்த தவறு என்று அவனால் உணர முடிந்தது. விழுந்துகிடக்கும் மாயத் திரையை விலக்க நாள் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அற்புத நாளும் வந்தது.

தன் அலுவலக பார்ட்டி ஒன்றுக்கு, மிகவும் வற்புறுத்தி தீபிகாவை அழைத்துப் போனான். திருமணத்துக்குப் பிறகு முதல் முதலாக பார்க்கிறார்கள் என்பதால், அவளே எதிர்பார்க்காத வகையில் ஏகப்பட்ட வரவேற்பு.

''நீங்க சமைச்ச காளான் மஞ்சூரியனையும் வெஜிடபிள் புலாவையும், 'என் வொய்ஃப் பண்ணினது.. சூப்பரா இருக்கும்.. சாப்பிட்டுப் பாருங்க..'னு ஆபீசுக்கே விருந்து வெச்சுடுவார் குமரன்'' - இது அக்கவுன்ட் செக்ஷன் கவிதா.

''பத்து வயசிலேயே டிராயிங் காம்படிஷன்ல கலெக்டர்கிட்ட பிரைஸ் வாங்கியிருக்கீங்களாமே.. இதுவரை நூறு தடவை சொல்லிட்டார் உங்க ஹஸ்பண்ட்..'' என்றார் பர்சனல் மேனேஜர்.

''நாங்க எல்லாம் லன்ச், டீ டைம்னு வெளிய போயிட்டா, ஐயா நைஸா அவரோட சிஸ்டம் ஸ்கிரீன் சேவரையேதான் பார்த்துட்டு இருப்பாரு. அட... உங்க போட்டோதாங்க அவனோட ஸ்கிரீன் சேவர்!'' - அவளை இன்னும் சிவக்க வைத்தான் குமரனின் நெருங்கிய தோழன் மூர்த்தி.

விருந்தோடு நடந்த விளையாட்டுப் போட்டியில், ஒவ்வொருவரும் தங்கள் மனைவிக்கு பிடித்த பத்து அம்சங்களை ஒரு பேப்பரில் எழுத வேண்டும். அத்தனையையும் சரியாக எழுதிய குமரனைப் பாராட்டிய கைதட்டல் ஓய வெகு நேரம் ஆயிற்று.

கண்களில் கண்ணீர் தழும்ப நின்றுகொண்டிருந்த தீபிகா கையில் மட்டும் சாட்டை கிடைத்திருந்தால், தன்னைத் தானே அடித்துக் கொண்டிருப்பாள்.

அலுவலகத்தில் அதுவரை 'ரிசர்வ்டு டைப்'ஆக அறியப்பட்டிருந்த குமரன் மைக் பிடிக்க, அனைவரும் அசந்து போய் பார்த்தார்கள்...

''கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாளே..!
அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு சீப்பாக இருப்பேன்
இல்லை... செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டுபோகும்... கொண்ட காதல் கொள்கை மாறாது...''

சபை என்றுகூட பார்க் காமல் வார்த்தைகள் முடியும் முன்னே ஓடிச்சென்று கணவனைக் கட்டிக் கொண்டாள் தீபிகா. 'ஹே' என கூட்டம் ஆர்ப்பரித்ததில் அவளின் அழுகைச் சத்தம் அடங்கிப் போக, ரகசியமாக அந்தக் கூர்நாசியை செல்லமாகக் கிள்ளினான் குமரன். இனி அவர்கள் பஞ்சணையில் காற்றும் உண்டு, காதலும் உண்டு!

சிலர் காதலை மௌன ராகமாக வாசிப்பார்கள். சிலர் கடை விரித்து கச்சேரி வைப்பார்கள். குமரன் இதில் முதல் வகை. தீபிகா இரண்டாம் வகை. இப்போது தீபிகாவுக்காக தன்னையும் 'இரண்டாம் வகை'யில் சேர்த்துக் கொண்டான் குமரன்.



திங்கள், 22 ஜூன், 2009

காமெடி பேட்டி



''இன்று பதவி என்னும் ஒரு பெரிய சுமையை தாங்கி கொண்டு உங்கள் முன்பு நிற்கிறேன். என்னால் முடிந்தவரை ஏழை எளிய மக்களுக்கு உதவுவேன். அவர்களுக்காக என் உயிரையும் தர தயராக இருக்கிறேன்.''
--மத்திய அமைச்சர் அழகிரி



அரசியல் கட்சி துவக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இப்போது அது பற்றி நான் நினைக்கவில்லை. ஆனால் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் எப்போது என்பது எனக்கு தெரியாது. என்னுடைய ரசிகர்கள் இப்போதே என்னுடைய தொண்டர்களாக மாறி விட்டனர்.

என்னுடைய இயக்கம் சார்பாக உள்ளூர் பிரச்சனைகளுக்காக நிச்சயமாக போராடுவார்கள் எனது இயக்கத்தினர். நானும் அதில் நிச்சயம் பங்கேற்பேன். வீதியில் இறங்கிப் போராடுவேன்.

-- நடிகர் விஜய்


மக்களே நல்லா பாத்துக்குங்க இவுங்கள இன்னுமா நம்புது நம்ப ஊரு?

ஞாயிறு, 21 ஜூன், 2009

அப்பாவின் சொத்து : சிறுகதை





தந்தையர் தின சிறப்பு சிறுகதை


ல்லுப்பட்டிக்கு புறப்பட வேண்டிய வண்டி, பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதற்றப்பட்டார். 4.50-க்கு தானே கிளம்ப வேண்டிய வண்டி; 4.15 தானே ஆகிறது. நேரத்தை மாற்றிவிட்டார்களா? சர்பத்தை மடக்மடகென்று வேகமாக குடித்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்தார். பதற்றமாக ஐந்து ரூபாய் நோட்டை சர்பத் கடைக்காரரிடம் நீட்டினார். கடைக்காரர் மற்றொரு வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருந்ததை பொருட்படுத்தாமல், "சீக்கிரம் பாக்கி கொடுப்பா" என்றார். கடைக்காரர் சிதம்பரத்தை பார்க்காமல் அந்த வாடிக்கையாளரிடம் பேசிக்கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு தனது பணப்பெட்டியில் வைத்து ஒரு ரூபாய் காசை பாக்கி கொடுத்தார். சிதம்பரம் அதை வாங்கிக்கொண்டு விருவிருவென பேருந்தை நோக்கி நடந்தார்.

"என்னப்பா, 4.50-க்கு தானே வண்டி? இப்பவே எடுக்குற?" படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நடுத்துனரைப் பார்த்து கேட்டார்.

"இல்லண்ணே. 2.30 மணி வண்டி அண்ணே. இப்பதான் எடுக்கிறோம்."

"என்னப்பா ஆச்சு?"

"அமராவதிபுதூர் நம்ம ஆனா மெனா வீடு கிட்ட திருப்பம் இருக்கிலண்ணே, அங்க ஆக்ஸிடண்டு ஆயிடுச்சண்ணே!""திரும்பி வரம்போதா, இல்லை போகும்போதாப்பா?"

"வரும்போதுதான் அண்ணே. போகும்போதுதான் பிரச்னை ஒண்ணுமில்லையேணே. லெவ்ட்தானே எடுக்கணும். வரும்போதுதான் அண்ணே, ஒரே கடையா வந்திருச்சண்ணே. அங்கிட்டுருந்து வர வண்டிங்க சரியா தெரியமாட்டேங்குதண்ணே."

"ரொம்ப நாளா அப்படித்தானே இருக்கு. என்னமோ புதுசா வந்த மாதிரி சொல்ற. உங்களுக்கெல்லாம் வரவர பொறுமையே இல்லையப்பா. விருட்டுனு தான் எல்லா இடத்திலையும் ஓட்டுறீங்க. சும்மா பழியை ரோடு மேலையும், மக்கள் மேலையும், அரசாங்கம் மேலையும் போடாதீங்கப்பா. நம்ம என்ன செய்தோம், எப்படி மாத்தி செய்யலாம்னு பாருங்கப்பா," எனச் சொல்லிக் கொண்டே பேருந்தில் ஏறி உட்கார்ந்தார் சிதம்பரம்.

"என்னப்பா, இந்த தடவை ஒழுங்கா கொண்டு போய் ஊர்ல சேத்துவிட்டுருவீங்கள?"

"பதினோரு வருஷமா இதே ரூட்டுதன் அண்ணே ஓட்டுறோம். ஒரு தடவைகூட இப்படி ஆனதில்லண்ணே. நாங்களும் அவ்வளவு பொறுமையாகதான் இருக்கிறோம். ஒரு நாளைக்கு எங்க வேலையை பாருங்கண்ணே. அப்பதான் தெரியும். எவன் ரூல்ஸை பாத்து போறான்? எல்லாம் என்னவோ அவன் வீட்டு ரோடு மாதிரி நினைச்ச இடத்தில நினைச்ச மாதிரிலாம் ஓட்டுறான். ஆக்ஸிடண்டு ஆனா தப்பு யாரு மேலனு எவனும் பாக்கலை. பெரிய வண்டி எதுவோ அதை போட்டு அடிக்கிறான்."

குறைகள் தான் குறைவாக இல்லாமல் எல்லா இடத்திலும் நிறைவாகவே உள்ளது. தினசரி வாழ்க்கையில் எத்தனை பேர் மீதும் எவ்வளவு குறைகள்? வீட்டில் குறைகள், சொந்தக்காரர்களிடம் குறைகள், வேலையில் குறைகள், நாட்டில் குறைகள். ஒரு வடையை எடுத்தால், நடுவில் இருக்கும் ஓட்டையவா பார்த்து கொண்டிருக்கிறோம்? வடையைதானே பார்த்து, கடித்து, ருசித்து சாப்பிடுகிறோம்? இந்த நாட்டிலும், வீட்டிலும் சுவையானதை ரசிக்காமல், ஓட்டையை வெறிச்சோடி பார்பவர்கள் தான் அதிகம். ஒரு காலத்தில் இந்த நடத்துனர் வேலை இவன் கனவாக இருந்திருக்கும். நினைவானவுடன் அதை ரசிக்காமல், அடுத்த கனவின் மேல் தான் கவனம். மனித இயல்பு.

சிதம்பரம் தன் மகளைப் பற்றி இந்த விஷயத்தில் ரொம்பவும் யோசித்தார். நடத்துனரை சொல்லி என்ன, தன் வீட்டில் பார்வதியும் அப்படித்தானே இருக்கிறாள். பாருவை நினைக்கையில் சிதம்பரம் ஒரு பெருமூச்சு விட்டார்.

பேருந்து கல்லுக்கட்டி கடைத்தெருவைத் தாண்டி டிசோட்டா பேக்கரி வழியாக அமராவதிப்பூதூரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பேக்கரி வாசலில் அண்ணாமலை நின்று கொண்டிருந்தார். இதனால்தான் சொந்த மண்ணை விட்டு சிதம்பரத்தால் எங்கும் செல்ல விருப்பம் இல்லை. எங்கு பார்த்தாலும் தெரிந்த கடைகள், தெரிந்த மக்கள், தெரிந்த தெருக்கள், தெரிந்த வீடுகள். இது எல்லாம் எணக்கு தெரிந்தது, என்னுடையது போன்ற ஓர் உணர்வு. என்னதான் மதுரையில் பாரு வீடு இருந்தாலும், ஒரு பிடித்தம் வரவில்லை சிதம்பரத்துக்கு.

"அண்ணே இறங்கிக்கோங்க."

எந்த ஊரில் கிடைக்கும் இந்த மரியாதை? பேருந்து நிற்குமிடம் பெருமாள் கோயில் என்றாலும், சிதம்பரம் வீடு இருக்கும் தெரு வந்தவுடன் எப்பொழுதும் நடத்துனர் பேருந்தை நிறுத்த சொல்வார். அவருக்கு தெரியும், சிதம்பரம் வீடு இருக்குமிடம்.

"இல்லப்பா. கோயில் கிட்டையே இறங்கிக்கிறேன். அஞ்சு மணி தீபத்தை பாத்துட்டு அப்படியே வீட்டுக்குப்போறேன்."

தீபத்தை பார்த்து வீடு திரும்பியதும் சிதம்பரதுக்கு ஓர் அதிர்ச்சி. வீட்டு வாசலில் பாரு. ஒன்றும் புரியவில்லை. எப்பவும் ஒரு போன் போட்டில வருவா? என்ன திடுதிப்புனு?

"என்னமா பாரு? எப்ப வந்த? நீ வரது தெரியாதம்மா, தெரிஞ்சிருந்தா வீட்டிலையே..."

மேற்கொண்டு சிதம்பரம் பேசவில்லை. அவள் முகத்தில் இருக்கும் கோபமும், கண்களில் காட்டும் உணர்ச்சியும் புரிந்துவிட்டது. என்னமோ நடந்திருக்கு.

கதவை திறந்து உள்ளே சென்றதும், "வாம்மா வா. என்னமா, என்னாச்சு?"

"நீங்க இப்படி பண்ணுவீங்கனு எதிர்பாக்கலைப்பா"

சிதம்பரம் இதை எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் அவளாகவே அதை சொல்லட்டும் என்று, "எதைம்மா சொல்ற?" என கேட்டார்.

"நல்லதுக்கு காலமே இல்லப்பா. நல்லவளா இருந்து, ஒரு பிள்ளை செய்ய வேண்டியதையெல்லாம் நான் செஞ்சேன். என்னப்பா குறை என் மேல? சின்ன வயசிலிருந்தே அவ தாம்ப்பா உங்களுக்கு. கடைசில சொத்தையும் அவளுக்கே கொடுத்தீட்டீங்களேப்பா."

அழ ஆரம்பித்தாள் பாரு.

"கஷ்ட்டப்படுறாமா. அவளுக்குதான் அது அதிகமா உதவும்."

"கஷ்ட்டப்படுறானா? யாருனால கஷ்ட்டப்படுறா? அவ கஷ்ட்டத்துக்கு அவதான் காரணம். கல்யாணத்துக்கு முன்னாடி நீங்களும் ஒண்ணும் சொல்லமாட்டீங்க. அம்மாவும் ஒரே செல்லம். கிடந்து ஆடினா. போன இடத்தில அவ திமிற அடக்கிடாங்க."

பாருவுக்கு ஒரே தங்கை. சரசு. கடைக்குட்டி அம்மாவுக்கு செல்லக்குட்டி. சரசு பிறரை கேலி செய்தால் அது நகைச்சுவை. பதிலுக்கு பதில் பேசினால் அது சாமர்த்தியம். அவள் கோபப்பட்டால் நாம் தான் அவள் கோபப்படாதப்படி நடந்துக்கொள்ள வேண்டும். அவள் தப்பு செய்தால், பாவம் அவள் சின்ன பொண்ணு. அவள் அப்படித்தான் என்று கல்யாணத்துக்குமுன் ஏற்று கொண்டவளை கணவன் அவ்வாறு எற்றுக்கொள்ள மறுத்தான். அவள் மாறவேண்டும் என்று எதிர்பார்த்தான். அவளுக்கோ மாறி பழக்கமில்லை. தன்னை மாற்றினால் தன்னையே இழப்பதுப்போல ஒரு பயம். ஆண்டுகள் சென்றன. பிள்ளையும் பிறந்தது. பிள்ளை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று எல்லோரையும் போல் ஒரு நப்பாசை கணவனுக்கு. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? ஐந்தில் வளையாதது பிள்ளை பெற்றால் ஐம்பதில் வளையக்கூடும் என்று சொல்லவில்லையே?

தினம் தினம் கல்யாண வாழ்க்கை கசந்தது. சண்டை போடுவதற்க்கு மட்டும்தான் இருவரும் பேசிக்கொண்டார்கள். அம்மா உயிரோடு இருக்கும் வரை ஒரு சிரிய நூல் இழையில் சரசுவின் திருமணத்தை கோர்த்துவைத்திருந்தாள். அம்மா இறந்த பிறகு நூல் அறுந்தது. சரசு விவாகரத்துப் பெற்றாள். பத்தாண்டு காலம் கவலைக்கிடமாக இருந்ததால்தான் அம்மா இறந்தாள் என பாரு மட்டும் புலம்பினாள்.

சண்டையும் சச்சரவுமாக இருக்கும் சரசு வீட்டிற்கு சிதம்பரம் என்றும் சென்றதில்லை. பாரு வீடுதான் அவருக்கு வீடு மாதிரி. பாரு மகன் சோமு தான் பேரன். விவாகரத்துக்கு பிறகும் சரசுவை காண விரும்பவில்லை. சரசு உலகின் மீதும் வாழ்க்கையின் மீதும் இன்னும் கோபமாகவே இருந்தாள். வேலை எதுவும் என்றும் பார்ததில்லை. செலவுக்கு அப்பாவும் கணவனும் பணம் அனுப்புவார்கள். பாரு அதை பொருட்படுத்தவில்லை. ஆனால் அப்பா இப்ப எண்பது சதவீதம் அவளுக்கும், இருபது சதவீதம் இவளுக்கும் சொத்து பிரித்ததில் இடிந்து போனாள். அப்படி இருக்கிற அவளுக்கு எப்படி எல்லாம் நடக்குது? அப்ப நானும் ஆடணுமோ? பிடிவாதம் பிடிக்கணுமோ? அப்பா ஏமாத்திட்டாங்களே? நம்ம அப்பாவா? ஏன்? எதுக்கு? பணம் கூட வேண்டாம். ஆனா எனக்கு காரணம் தெரிஞ்சாகணும்.

"நீ நல்லவ. நல்லா இருக்கிற. நல்லா இருப்ப. மாப்பிள்ளை நல்லவுக. சோமுவும் நல்லா வருவான். உன்னை தொட்டு ஒரு கவலையும் இல்லமா. சந்தோஷம்தான் மா. உன் புருஷன் அளவுக்கு புத்திசாலியகவும் பொறுமசாலியாகவும் அவளுக்கு அமையல. இப்ப அவனும் கூட இல்லை. பிள்ளையோட தனியா இருக்கா. எங்கேயும் போறதில்லை. யாரோடையும் பேசறதில்லை. அவ எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்குமா. சொத்தைகூட அவ பையன் பேர்லதான்மா எழுதினேன்."

"என்னமோ எனக்கு மட்டும் எல்லாம் வானத்திலிருந்து விழுந்தமாதிரி பேசுறீங்க. நான் அப்படி ஏற்படுத்திக்கிட்டேன். சந்தோஷம்ங்கிறது நமக்கு கிடைக்கறதை வைத்து இல்லை, கிடைத்ததை வைத்து நாம ஏற்படுத்திகறது. நான் நல்லா இருக்கிறதுல எனாக்கும் பங்கு உண்டுப்பா. அதான் அதை பாரட்டுற மாதிரிதான் நல்ல பரிசா கொடுத்துட்டீங்களே" - அழுதுக்கொண்டே பேசினாள் பாரு.

"சொத்தை சரிபாதி கொடுக்காததினால உன்னை பாராட்டுலைனு நினைக்காதம்மா."

"வேற எப்படிப்பா? நாம செய்றதை வைத்துதான் நம்ம எண்ணங்கள் என்னனு தெரியும். உங்க செயல்கள் தான்பா உங்க முக்கியத்துவங்களை காட்டுது. உங்க மனசில என்னோட முக்கியத்துவம் என்னனு நான் புருஞ்சுகிட்டேன். நான் வரேன்பா."
பாரு எழுந்து கதவை நோக்கி நடந்தாள்.

"எனக்கு நீங்க இரண்டு பேரும் நல்லாயிருக்கணும். நீ புருஞ்சுப்பேனு நினைச்சேன்."

"எப்பவும் நான்தானே புருஞ்சுக்கணும்."

திரும்பிப் பார்க்காமல் பாரு வெளியேறினாள்.

****

பாரு அப்பாவை பார்த்து ஆறு மாதம் ஆகிவிட்டது. இவ்வளவு நாட்கள் அப்பாவை பார்க்காமலும் பேசாமலும் இருந்ததில்லை. அவ்வப்பொழுது இரக்கம் வந்தாலும் கோபமும் அழுகையும் தனியவில்லை பாருவுக்கு. மனதுக்கு மாறுதலாக இருக்கட்டுமென்று மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றாள்.

"நல்லாயிருக்கியாமா?"

திரும்பிப் பார்த்தால் அண்ணாமலை அண்ணன்.

"அண்ணே! நல்லாயிருக்கேன் அண்ணே. நீங்க எப்டியண்ணே இருக்கீங்க?"

"எனக்கென்னமா. சந்தோஷமா மகன் வீட்டுல இருக்கிறேன். ஊருக்கு போறேன்டானா விடமாட்டேங்கிறான். உங்க அப்பா மாதிரி எனக்கும் ஊர்தான்மா பிடிக்கும்."

"உனக்கு தெரியுமா? நம்ம சோமு காலெஜிலதான்மா என் பேரனும் படிக்கிறான். நேத்தைக்கு வீட்டுக்கு வந்திருந்தான் அவனைப் பாக்க. நான் யாருனு அவனுக்கு தெரியாது. அவனுக்கு அப்புறம் எடுத்து சொன்னேன் எப்படி சொந்தம்னு"

"சொன்னான் அண்ணே. எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க. நாங்க அண்ணாநகர்லதான் இருக்கோம்."

"நீ கூப்பிடறது லேட் மா. சோமு விலாசமெல்லாம் கொடுத்து எங்களை அப்படி கூப்புட்டான்மா. நல்ல பையன்மா உன் பையன். அப்படி ஒரு மரியாதை தெரிஞ்ச பையன். நல்ல குணம். நல்லா பேசி பழகுறான். அப்படியே உங்கப்பாக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கிற மாதிரி இருந்திச்சு. உங்கப்பாவுக்கு பையன் இல்லை. சோமுவைதான் பையன் மாதிரி நினைச்சாரு. லீவுல எல்லாம் அவனோடே இருந்ததுல, சோமு உன் அப்பாவை கவனிச்சு பாத்திருக்கான். சரசு வீட்டு பிரச்னைனாலே எல்லா கவனமும் நேரமும் சோமுவுக்கே கொடுத்திருக்காரு. சிதம்பரம் அண்ணன்கிட்ட காசு பணம் பெரிசா இல்லைனாலும், அவுககிட்ட இருக்கிற பெரிய சொத்தே அவரோட எண்ணங்களும், பேச்சும், குணமும், பழக்கவழக்கங்களும்தான்மா. எங்க எல்லாத்தையும் அவரோடவே கொண்டுபோய்டுவாரோனு நான் நினைச்சதுண்டு. நல்ல வேளை அத்தனையும் அப்படியே உன் பையன்கிட்ட கொடுத்திருக்காரு."

பாருவுக்கு அப்பாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது.

--இளங்கோ மெய்யப்பன்

வெள்ளி, 19 ஜூன், 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள்



பல வருடங்களுக்குப் பிறகு, நான் உனது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துகிறேன், வாழ்த்தப் போகிறேன்.
இனிய நட்பு என்றுமே தோற்பதில்லை. நட்பு சாகா வரம் பெற்றது.

உங்களுக்கு எல்லாம் யாராக இருப்பது பெருமையா இருக்குன்னு கேட்டா என்ன சொல்விங்க!
அம்மா, அப்பாக்கு மகனாக, காதலிக்கு காதலனாக எப்படி எத்தனையோ ?
ஆனால் உனக்கு நண்பன் என்பதில் பெருமைபடுகிறேன்!!!

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுகிறேன்

Dubai Metro rail







இதோ உச்சக்கட்டமாக பணிகள் முழுவீச்சாக நடைபெறுகிறது துபாய் மெட்ரோ.காரணம் ஒன்றுமில்லை 09/09/09 அன்று திறந்து வைக்கப்படுகிறது.ஆனால் இதுவரையிலும் பயணகட்டணம் பற்றி வாய் திறக்கவில்லை துபாய் அரசு.
பொறுத்திருந்து பார்க்கலாம் ,இன்னும் எண்பது நாட்கள் மட்டுமே!!!!

காமெடி


பாப்பா, லைசென்ஸ் இருக்கா...? எட்டு போடத் தெரியுமா...?




ஏழரை வேணா போட்டுக் காட்டவா சார்...!!










ஏதோ ஆற்காட்டார் புண்ணியத்துல, எந்த பயமும் இல்லாம ரெண்டு மூணு வருஷமா இங்கே கூடு கட்டிக் குடும்பம் நடத்திக்கிட்டிருக்கேன்...!



வியாழன், 18 ஜூன், 2009

நட்பு காலம்







-கவிஞர் அறிவுமதி


கண் பார்த்துப் பேசினாலே கடலை , காதல் எனத் தூற்றித்திரியும் உலகத்தில் நட்பின் உண்மையை ‘நச்’ எனச் சொல்லியுள்ளீர்.

எனதுயிர் தோழி வினிதா க்கு சமர்பிக்கிறேன்

சிறிது வெளிச்சம்



ராத்தியில் புகழ்பெற்ற எழுத்தாளரான மிருணாள் பாண்டே 'பெட்டை நாய்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். கதை மும்பையில் உள்ள அடுக்கு மாடி வீடு ஒன்றில் துவங்குகிறது. தனது பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பிவிட்டு, தாத்தாவும் பாட்டியும் மட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்கிறார்கள். உதவிக்கு ஒரு வேலைக்காரப் பெண் இருக்கிறாள்.

தாத்தாவும் பாட்டியும் நாள் முழுவதும் டி.வி.பார்ப் பார்கள். ஆங்கில தினசரியை வரி விடாமல் படிப்பார்கள். அவ்வப்போது அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளுடன் போனில் பேசுவார்கள். ஒருநாள் வேலைக் காரம்மா வீட்டைத் துடைத்துக்கொண்டு இருக்கும் போது, தாத்தா அன்றைய செய்தித்தாளில் வந்துள்ள ஒரு செய்தியைப் பற்றி அவளிடம் விசாரிக்கிறார்.


அதாவது, அந்த வேலைக்காரம்மா வசிக்கும் சேரிப்பகுதியில் ஒரு நாய்க்கும் 12 வயது சிறுமிக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டு இருக்கிறது என்று புகைப்படத்துடன் செய்தி வெளியாகி உள்ளது. இது என்னமுட்டாள்தனம் என்று புரியாமல், 'உனக்கு இந்தத் திருமணம் பற்றித் தெரியுமா?' என்று தாத்தா கேட்கிறார்.'நான் போயிருந்தேன். நல்ல கூட்டம்' என்றபடியே வேலை செய்கிறாள் அவள்.

தாத்தாவுக்கு ஆத்திரம். முட்டாள்ஜனங் களாக இருக்கிறார்களே என்று. '12 வயது சிறுமிக்குத் திருமணம் செய்வது சட்டப்படிதவறு. உங்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க முடியும். தெரியுமா?' என்கிறார். உடனே வேலைக்காரம்மா, 'மனிதர்களுடன் கல்யாணம் செய்வதற்குத்தான் வயதுக் கட்டுப்பாடு உள்ளது. நாய்களுடன் திருமணம் செய்வதற்கு இல்லை. ஒருவேளை காவல்துறை விசாரிக்க நினைத்தால், நாயை எப்படி விசாரிப்பார்கள்?' என்று கேலியாகக் கேட்கிறாள்.

'படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால்தான் இப் படி நடந்துகொள்கிறீர்கள்' என்று கத்துகிறார் தாத்தா. 'இதில் என்ன தவறு இருக்கிறது?' என்று இயல்பாகக் கேட்கிறாள். தாத்தா, 'இதை எதிர்த்து நான் பொதுநல வழக்கு தொடரப்போகிறேன்' என்கிறார். எதற்காக இந்தக் கிழவர் இவ்வளவு ஆவேசப்படுகிறார் என்று அந்த வேலைக்காரம்மா நினைக்கிறாள்.

ஒரு பொண்ணுக்கு நாயைக் கல்யாணம் பண்ணி வைப்பதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. ஒன்று, அந்த நாய் ஒருபோதும் குடித்துவிட்டு வந்து அவளைப் போட்டு அடிக்காது. மற்றது, அந்த நாய் போட்டதைச் சாப்பிட்டுப் படுத்துக் கிடக்கும். 'அதைச் சமைத்துத் தா... இதைச் சமைத்துத் தா' என்று இம்சை பண்ணாது. கார், பைக், தங்கச் சங்கிலி என்று வரதட்சணை எதுவும் கேட்காது.

சராசரி ஆம்பளை போல திருமணமான சில நாட்களுக்கு 'கண்ணே மணியே' என்று கொஞ்சிக் குலாவி, அடுத்த வாரத்தில் 'தண்டம், முட்டாள், தடிமாடு' என்று திட்டாது. என்றைக்கும் நன்றியோடு வாலை ஆட்டிக்கொண்டு இருக்கும். இவை யாவையும் விட ராத்திரி ஆனதும் 'என்னுடன் படுத்துக்கொள்!' என்று அவளது உடல் சிரமங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தன் இச்சைக்கு அவளை வற்புறுத்தாது. இதைவிட வேறு நல்ல புருஷன் யார் கிடைப்பார்கள் என்று தன் வேலையைத் தொடர்ந் தாள் வேலைக்காரம்மா என்று அந்தக் கதை முடிகிறது.

இந்தியச் சமூகம் பெண்ணைத் தாயாக, தெய்வமாக, மகாசக்தியாக வழி பட்டது என்ற புனித பிம்பங்களின் மீது சாட்டை அடி போல விழுகிறது இந்தக் கதை. வாசிக்கும் ஒவ்வொரு ஆணின் மீதும் இந்த சவுக்கடி விழுகிறது. இப்படிப் பெண்களை நடத்தும் ஒரு சமூகத்தில் ஆணாக இருப்பதன் குற்ற உணர்வு பீறிடுகிறது. மிருணாள் பாண்டேயின் கதை... திருமணம் என்ற பெயரில் பெண்கள் காலங்காலமாக அடைந்துவரும் காயங்கள், வலிகளைக் குரலை உயர்த் தாமல் முகத்தில் அறைவது போலச் சொல்கிறது.

இந்தக் கதை வெறும் கற்பனை அல்ல; நம்மைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ் வுகள் இந்தக் கதையை நிஜம் என்று உறுதிப்படுத்துகின்றன.

கிராமங்களில் மழை இல்லாத நாட்களில் தவளைகளுக்குத் திருமணம்செய்து வைப்பதுண்டு. கழுதைக் கல்யாணம் நடப்பதைக்கூடஅருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். அவை கிராமத்துச் சடங்கு கள் என்று நம்பப்படுகின்றன. ஆனால், நாயைத் திருமணம்செய்த மனிதரையும், ஐந்து வயதுச் சிறுமியை ஒரு நாய்க்குத் திருமணம் செய்துவைத்தார்கள் என்ற செய்தியையும் நாளிதழில் வாசித்தபோது அடைந்த திகைப்பும் குழப்பமும் இன்று வரை பிடிபடாமலேதான் உள்ளது.

ஜாம்ஷெட்பூரில் சோனி என்ற மாணவிக்கு ஒரே ஒரு எத்துப்பல் முளைத்திருக்கிறது. இந்தப் பல் பெரிதாக வளரவே அவளது பெற்றோர், பெண்களுக்கு நீண்ட எத்துப் பல் முளைப்பது துரதிருஷ்டம். அது அசுரத்தனத்தின்அடையாளம். ரத்தக்காட்டேரியாக பெண் மாறி விடுவாள். ஆகவே, அவளை ஒரு நாய்க்குத் திருமணம் செய்துவைத்து, அந்தப் பல்லைப் பிடுங்கி எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து, ஊர் கூடி விருந்துவைத்து அவளை நாய்க்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கல்யாணத்தில் மக்கள் கலந்துகொண்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு, வாழ்த்தியும் சென்றுள்ளார்கள்.

இதன் மறுபக்கம் போல, செல்வகுமார் என்ற இளைஞன், பாலுறவுகொண்டு இருந்த நாய்களைத் தன் சின்ன வயதில் கல்லைவிட்டு எறிந்து காயப்படுத்தியதில் ஒரு நாய் செத்துப் போய்விட்டது... அந்தக் காரணத் தால்தான் தனது காது செவிடாகிவிட்டது என்று நம்பி, சாபத்திலிருந்து மீண்டு வர நாயைத் திரு மணம் செய்துகொண்டிருக்கிறார். பகுத்தறிவும் படிப்பறிவும் மேம்பட்டது என்று நாம் பெருமை யாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இந்த விசித்திரத் திருமணம் நடைபெற்று இருக்கிறது.

இதைவிடப் பெரிய அபத்த நாடகம் சென்ற ஆண்டு டெல்லியில் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நாய்களுக்கு ஒரே இடத்தில் திருமணங்கள் செய்துவைக்கப்பட்டன. அந்தத் திரு மணத்தை நடத்தியவர் நாய் வளர்ப்பதில் பிரசித்தி பெற்ற ஒரு பணக்காரர். அவருக்குத் தனது நாய்களுக்குப் பொருத்தமான துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற விருப்பம் உருவானது. அதை நிறைவேற்றிக்கொள்ள, தனக்குத் தெரிந்தவர்களிடம் உள்ள நாய்களை எல்லாம் தேர்வுசெய்து அரேஞ்ச்டு மேரேஜ் செய்துவைத்திருக்கிறார்.

நாய்கள்கூட தங்கள் விருப்பம் போலத் தங்களதுதுணை களைத் தேடிக்கொள்வதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதைத்தான் இந்த நிகழ்வு வெளிக்காட்டுகிறதா? இவை வேடிக்கைச் சடங்குகள் அல்ல; மாறாக, நாம் எவ்வளவு பழைமையில், அர்த்தமற்ற மூடத்தனத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

திருமணம் என்ற நூற்றாண்டு கால நடைமுறை பால் உறவுக்கான துணை சேர்க்க மட்டும்தானா? திருமண முறிவுகளுக்கு ஆண் மட்டுமே காரணம் இல்லை; பெண் களும் காரணமாக இருக்கக்கூடும். பெரும்பான்மை திருமணங்கள் வணிக ஒப்பந்தங்கள் போலவே நடக்கின்றன. உறவைவிடப் பணம் பிரதானமாகிவிட்டது.

எளிய மனிதர்களின் திருமணங்களில் சிறு சண்டைகள் சச்சரவுகள் வந்தபோதும் குடும்பம் பிரிவது இல்லை. ஆனால், வசதியான திருமணங்கள் எளிய காரணம்கூட இல்லாமல் பிரிந்துவிடுகின்றன என்பதே நிஜம்.

எல்லாத் திருமணங்களும் சந்தோஷமாகவே தன் வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குகின்றன. ஆனால், இன்று உள்ள விவாகரத்து வழக்குகளைக் காணும்போது பெரும்பான்மையான பயணங்கள் துவங்கிய இடத்திலேயே முறிந்துவிடுவதை அறியமுடிகிறது. முக்கியக் காரணம், புரிந்துகொள்ளுதல், விட்டுக்கொடுத்தல், அன்பைப் பகிர்ந்துகொள்ளுதல் என இந்த மூன்றும் இல்லாத சூழல்.

பெண்களுக்குத் திருமணம் ஏற்படுத்தும் மௌனம் புரிந்துகொள்ளப்பட முடியாதது. அது ஒரு நீரூற்றைப் போல அவளுக்குள் கடந்த காலத்தின் நினைவுகளைப் பீறிட்டுக்கொண்டே இருக்கிறது. 'அமைதி எப்போதும் புன்னகையில்தான் வேர்விட்டு இருக் கும்' என்பார்கள். ஆனால், இன்று திருமணம் ஆனதும் பெண்களிடம் இருந்து, இயல்பான சிரிப்பு மறைந்துபோகத் துவங்குகிறது. அக நெருக்கடி முகத்தில் உறைந்துவிடுகிறது. சிரிப்பதற்குக் காரணம் தேவைப்படுகிறது என்பதே நமது அக வீழ்ச்சியின் அடையாளம்தானே!

சிரிப்பை மறந்த பெண்களை எனது பயணங்களில், ரயிலில், பேருந்தில், சாலை ஓரங்களில், அலுவலகங்களில் காண்கிறேன். தன்னை மீறி அவர்கள் சிரிக்கும் தருணங்கள் அரிதானவை. ஏதேதோ யோசனைகள், கவலைகள், விளக்க முடியாத திகைப்பு போன்றவை படிந்த பெண் முகங்களையே பொதுவெளியில் அதிகம் காண முடிகிறது. காலில் அப்பிய ஈரக் களிமண்ணைப் போல, மன வேதனைகளோடுதான் பெண் தன் வாழ்வினை முன்னெடுத்துப் போகிறாள்.

அப்படி ஒரு பெண்ணைப் பற்றியே 'தி கலர் பர்ப்பிள்' என்ற ஹாலிவுட் திரைப்படம் விவரிக் கிறது. மிக அற்புதமான படம். பத்துக்கும் மேற்பட்ட முறை அதைப் பார்த்திருக்கிறேன். ஆலீஸ் வாக்கரின் நாவலை ஸ்பீல்பெர்க் படமாக்கி உள்ளார். சுறா மீன்களையும், வேற்றுக்கிரகவாசிகளையும்,டைனோ சர்களையும் கொண்ட சாகசப் படங்களை இயக்கி, பெரும் வெற்றிபெற்ற ஸ்பீல்பெர்க்கூட சினிமா வெறும் வணிகம் மட்டுமில்லை என்பதை உணர்ந்து இயக்கிய இரண்டு படங்களில் ஒன்றுதான் 'The Color Purple'; மற்றது 'Schindler's List'.

'தி கலர் பர்ப்பிள்' படத்தில், சிலி ஜான்சன் என்ற முக்கிய வேடத்தில் வூப்பி கோல்ட்பெர்க் நடித் திருக்கிறார். 1900-களின் துவக்கத்தில் அமெரிக்காவில் வாழும் கறுப்பினப் பெண்ணின் வாழ்வை விவரிக்கும் இந்தப் படம், ஒரு பெண்ணின் 30 ஆண்டுக் காலக் குடும் பப் போராட்டத்தை மிக உண்மையாக விவரிக்கிறது.

தனது 14-வது வயதில் கர்ப்பிணி ஆகிறாள் சிலி. அதற்குக் காரணம் அவளது அப்பா. வளர்ப்புத் தந்தையே மகளைக் கெடுத்துக் கர்ப்பிணி ஆக்கிவிடுகிறார். அவ ளுக்கு என்ன செய்வது, யாரிடம்சொல்லி அழுவது என்று புரியவில்லை. குழந்தையைப் பெற்று எடுக்கிறாள். அதை அவளது அப்பா பிடுங்கிச் சென்றுவிடுகிறார். இந்த விஷயம் பற்றி யாரிடமும் அவள் சொல்லக்கூடாது என்று மிரட்டி, மனைவியை இழந்த ஆல்பர்ட் ஜான்சன் என்பவருக்கு சிலியைத் திருமணம் முடித்துவைக்கிறார்.

ஜான்சன் அவளை ஓர் அடிமை போல நடத்துகிறான். அவனுக்குச் சிலியின் தங்கை நட்டி மீது கண். ஒவ்வொரு நாளும் குடிவெறி அதிகமாகி அவன் சிலியை பாலியல் வன்புணர்ச்சிகொள்கிறான். நட்டி அக்காவின் கஷ்டங்களைக்கண்டு அவளுக்கு உதவி செய்யமுயற்சிக்கிறாள். படிக்கக் கற்றுத் தருகிறாள்.ஆனால், அந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியை அவளால் தடுக்க இயலவில்லை.

இந்த நிலையில் ஜான்சன் பாடகியான தன் பழைய காதலியை அந்த வீட்டுக்கு அழைத்துவருகிறான். அந்தப் பெண்ணுக்கும் சிலிக்கும் இடையே ஒரு பெயர் இல்லாத உறவு ஏற்படுகிறது. பரஸ்பரம் இருவரும்ஒடுக்கப்பட்ட பெண்கள் என்பதைப் புரிந்துகொள்கிறார்கள்.

நட்டி குடும்பத்தைப் பிரிந்து, கிறிஸ்துவ மிஷினரி களோடு போகிறாள். அவளது கடிதம் மட்டுமே ஆறுதல் தருவதாக உள்ளது. இதற்கு இடையில் சிலியின் பிள்ளைகள் அவளிடம் இருந்து பிரிக்கப்படுகிறார்கள். கணவன் அவளை வன்கொடுமைப்படுத்துகிறான். அவள் துயரத்தை மட்டுமே வாழ்வாகக் கொள்கிறாள். முடிவில் சிலியிடம் தான் மிக மோசமான மனிதனாக நடந்திருக்கிறோம் என்று உணர்ந்த ஜான்சன், தன் சேமிப்புப் பணம் முழுவதையும் செலவழித்து, அவளின் பிரிந்துபோன குழந்தைகளையும் தங்கையையும் அவளோடு ஒன்றுசேர்க்கிறான். படம் முழுவதும் சிலி ஒரு விலங் கைப் போலவே நடத்தப்படுகிறாள். ஒரு பெண் வெறி பிடித்த நாயைத் திருமணம் செய்துகொண்டு இருப்பது போலத்தான் இருக்கிறது.

பனியில் வாழும் பென்குவின் தன் இணையைத் தேர்வு செய்வதற்குக் காதலுடன் தேடுகிறது; கண்டு கொள்கிறது. தேடிச் சேர்ந்த பிறகு ஒருபோதும் வேறு ஒரு பென்குவினை நாடுவதே இல்லை. சில வேளைகளில் பெண் துணை இறந்துவிட்டால் பென்குவின்அந்தஏக்கத் துடன் அதே இடத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது. வேறு எந்தப் பென்குவினையும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறது.

இணை சேரும் மிருகங்கள்கூடத் தங்களுக்குள்விளக்க முடியாத அன்புடன் இருக்கின்றன. படித்த, நவநாகரிகம் கொண்ட மனிதன் மட்டுமே திருமண விஷயத்தில் வால் இல்லாத நாயை நினைவுபடுத்துகிறான். அதுதான் கவலை தருகிறது!


எஸ்.ராமகிருஷ்ணன்


செவ்வாய், 16 ஜூன், 2009

தேனிலவு-சுஜாதா

கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல வாசனை கலந்திருந்தது. போலீஸ்காரர்கள் கறுப்பாகக் கோட்டு அணிந்திருந்தார்கள். தொப்பி வைத்துக்கொண்டு மைசூர்த்தனத்துடன் சிற்சிலர் கூடைகளில் சிவப்பு சிவப்பாகப் பழம் விற்றார்கள்.

சோபனாவுக்கு நிறுத்தி வாங்க வேண்டும் போலிருந்தது. நிறுத்திப் பூப்பறிக்க வேண்டும் போலிருந்தது. அந்தத் துல்லியமான காற்றை நெஞ்சு பூரா நிரப்பிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.

காருக்குள் ரவி சோபனா என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. ரவி ஒரு கையால் கார் ஓட்டிக்கொண்டு இருந்தான். மற்றொரு கை...

அதை விலக்கி ''ஏதாவது பாட்டுப் போடுங்களேன்'' என்றாள் சோபனா. அவன் காருக்குள் இருந்த கேஸட் ரிக்கார்டரைத் தட்ட, கீச்சுக்குரல் ஒலித்தது.

'அட அபிஷ்ட்டு
நேக்கும் நோக்குமா கல்யாணம்
நீ ஒரு அம்மாஞ்சி
ஆத்திலே இருக்கா கண்ணாடி
பாத்துக்க உம் மூஞ்சி'

''எப்படி பாட்டு?'' என்று ரவி சிரித்தான்.

''வேற இல்லியா?''

''சிரி சிரி மாமா, இருக்கு'' என்றான் ரவி.

''சம்சா! சம்சா! சம்சா!'' என்றது டேப்.

''பெரிசா வெக்கட்டுமா?''

''நிறுத்திடுங்க.''

''புடிக்கலியா? உனக்கு சினிமா பாட்டு யார்து புடிக்கும். ஜானகியா? ஈஸ்வரியா? சுசீலாவா?''

''ஜோன் பேயஸ் இருக்கா?''

''அது யாரு? ஊட்டில கிடைக் கும்னா வாங்கிடலாம்.''

சோபனா வெளியே பார்த்தாள். மலைச்சரிவு குளிருக்குப் பச்சைப் போர்வை போர்த்திருந்தது. ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதை ஞாபகம் வந்தது.

சோபனாவுக்கு மலைப்பாக இருந்தது. இரண்டு தினங்களில் எத்தனை புதுசான சமாசாரங்கள், எத்தனை புதிய முகங்கள், உறவுகள்... ரவியின் இடக்கை மறுபடி அவளை நாடியது. அதை எடுத்து ஸ்டீயரிங் சக்கரத்தின் மேல் வைத்து ''ரெண்டு கையாலயும் ஓட்டுங்க'' என்றாள்.

''நான் என்வி சாப்பிடுவேன். ஸ்மோக் பண்ணுவேன். தெரியுமில்ல?'' என்றான் ரவி.

''தெரியும். சொன்னீங்களே!"

''ஆரம்பத்திலேயே இதை எல்லாம் சொல்லிடணும் பாரு! உனக்கு ஆட்சேபனை இல்லையே!''

''இல்லை.''

முட்டையைப் பார்த்தாலே குமட்டும் சோபனாவுக்கு.

''யூரோப் போனபோது கத்துக்கிட்டேன். அங்கெல்லாம் நான் வெஜ் இல்லாம உயிர் வாழ முடியாது."

''எத்தனை நாள் போயிருந்தீங்க?''

''ஒரு வாரம். நாம ஃபாரின் போகலாமா சோபனா?'

''ம்.'

''எங்கே போகணும் சொல்லு? கம்பெனில எக்ஸ்போர்ட் பண்றதால எந்த கன்ட்ரி வேணும்னாலும் போகலாம்."

''சரி, யோசிச்சுச் சொல்றேன்.'

மலை ஏறிக் கொஞ்சம் இறங்கிச் சரிந்து வளைந்து சென்ற பாதையில் உயர்ந்து தனியாகத் தெரிந்தது அந்த ஓட்டல்.

''ஏ.ஸி. ரூம் இல்லீங்களா?''

''ஊட்டில ஏ.ஸி. ரூம் எதுக் குங்க. ஊரே ஏ.ஸிதானே!"

''சரி, இருக்கிறதுக்குள்ளேயே டீலக்ஸ் பார்த்துக் கொடுங்க. ரெண்டு பேப்பர் ரோஸ்ட் அனுப்பிடுங்க.''

''டிபன் செக்ஷன் ஆரம்பிக்கிறதுக்கு மூணரை ஆயிடுங்க.'' அலுத்துக்கொண்டான். ''க்ளார்க்ஸ் போயிரலாமா சோபனா?''

''இங்கேயே பரவாயில்லை'' என்றாள்.

''உனக்காகப் போனாப்போறதுன்னு இந்த ஓட்டல்ல இருக் கலாம்!''

அறைக்குள் புதிய பெயின்ட் வாசனை அடித்தது. கீழே கயிற்றுப் பாய் விரித்து, சுவர்களில் மர யானை முகங்கள் கோட் ஸ்டாண்டுகளாக நின்றன. ஒரு மஹா மஹா படுக்கை காத்திருந்தது. அதில் படுத்துக்கொண்டு ரவி, ''வா சோபனா'' என்றான். சோபனா ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.

''ரவி, இங்க பாருங்க. ப்யூட்டிஃபுல்!''

''வா சோபனா!''

''ரவி, இங்கேருந்து கீழே பெரிய குதிரைப் பந்தய மைதானம் தெரியுது. குதிரையெல்லாம் சுத்திச் சுத்தி வந்து நடை பழகுது. ஊர் பூராத் தெரியுது. அங்கங்கே அட்டைப்பெட்டி சொருகிச் சொருகி வெச்சாப்பல வீடுகள்.''

''அட்டைப்பெட்டி கிடக்கட்டும் சோபனா. இப்ப வர்றியா இல்லியா நீ?''

''ஏரிக்குப் போகலாம் ரவி!''

''க்ளிக்!'' ஆஸாஹி பென்டாக்ஸ் அவளை நோக்கிக் கண் சிமிட்டியது. விசைப் படகில் ஏரியில் அவளை அவன் அணைத்துக்கொண்டு இருக்க, எதிரே படகுக்காரன் எடுத்த 'க்ளிக்' ''ஆட்டோவைப் போட்டுட்டாப் போதும். யார் வேணா எடுக்கலாம். நாலாயிரம் ரூபா. லென்ஸே நாலாயிரம் ஆச்சு!'' ரவி அதை வாங்கிக்கொண்டு அதன் கழுத்தைப் பல கோணங்களில் திருகி, சோபனாவை வரிசையாக க்ளிக் க்ளிக் என்று தட்டிக் கொண்டு இருந்தான்.

''வீட்ல ஒரு போலராய்ட் இருக்கு. ஃபிலிம் ஆப்படலை!''

சோபனா தன் விரல்களால் நீரைத் தொட்டுப் பார்த்தாள். சில்லென்று எதிர்பாராத குளிர்ச்சி.

''கொஞ்சம் பெரிய எடம் போலிருக்கே! நமக்குச் சரிப்பட்டு வருமா?''

''பையன் பொண்ணைப் பார்த்துப் புடிச்சுப்போய் அவனே கேக்கறான். ரொம்பப் பணக் காராடி அவா!''

''நம்ம சோபனாவுக்கு அடிச்ச அதிர்ஷ்டத்தைப் பார்த்திங்களா! இருந்தாலும் அவளை ஒரு வார்த்தை கேட்டுர்றது நல்லதில்லையா?''

''பால் பாயசம் சாப்பிடறதுக்குச் சம்மதம் கேக்கணுமா என்ன? என்னடி சோபனா?''

''...........''

''எப்பவாவது அவ வாயைத் திறந்து பதில் சொல்லியிருக்காளா?''

''அவங்க வீட்டிலே மூணு கார் இருக்குக்கா!''

''க்ளிக். ஏ.எஸ்.ஏ.நம்பர் செட் பண்ணிட்டாப் போதும். பாக்கி எல்லாத்தையும் கேமராவே பாத்துக்கும். உள்ளுக்குள்ள எல்லாமே எலெக்ட்ரிக் வேலை... இதை ரிப்பேர் பண்றதுக்கு ஜப்பான்லதான் முடியும்! ரூமுக்குப் போக லாமா சோபனா?''

''இல்லை. பொட்டானிக்கல் கார்டன் போகலாம்.''

புல்வெளியில் புரள வேண்டும் போல இருந்தது. சரிவில் சின்னக் குழந்தை போல உருள வேண்டும் போல இருந்தது. ஒரே மாதிரி உடை அணிந்து ஏறக்குறைய ஒரே வயசுள்ள குழந்தைகள் வரிசையாக உட்கார்ந்திருக்க, அவர்களுடன் தானும் உட்கார்ந்து பிஸ்கட்டோ ஏதோ சாப்பிட வேண்டும் போல இருந்தது.

''ரூமுக்குப் போகலாமா சோபனா?''

''இப்பவேயா?''

''ஆரம்பிச்சதை முடிச்சுட வேண்டாம்?''

''இந்தப் பூக்கள் எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கு?''

''நிக்கறயா, ஒரு க்ளிக் எடுத் துடறேன்.''

''கொஞ்ச நேரம் நடக்கலாமே!''

''உன் இஷ்டம். நீ சொன்னா சரி'' என்று கடிகாரத்தைப் பார்த் தான்.

சரியாக ஒரு நிமிஷம் நடந்ததும், ''நடந்தது போதுமா?'' என்றான்.

''எங்கே போகலாம்?''

''காருக்குப் போய் கேஸட் போட்டுக் கேட்கலாம். அப்புறம் ரூம்ல போய் டிபன் சாப்பிட்டுட்டு ராத்திரி ஃபிலிம் போகலாம்.''

'''லட்சுமி' ஓடுது. நான் இன்னும் பார்க்கலை. நீ பாத்தியோ?''

''என்ன?''

''லட்சுமி; ஒரு குரங்கு டாப்ஸா ஆக்ட் பண்ணியிருக்காம்!''

''அப்படியா?''

''ஒரு ஸாங் நல்லா இருக்குன்னு எழுதியிருந்தான்.''

''அப்படியா? ரவி இங்க கொஞ்ச நேரம் உட்காரலாமே.''

''உக்காந்து போட்டோ எடுக்கலாமா?''

''இல்லை, படிக்கலாம்.''

பைக்குள்ளிருந்து அவள் கலீல் கிப்ரானின் 'A Jear and a Smile' என்கிற புத்தகத்தை எடுத்தாள். அவன் ஒரு வாரப் பத்திரிகையை எடுத்து சிகரெட் பற்றவைத்துக்கொண்டான்.

I freed myself yesterday from the clamour of the city and walked in the quiet fields until I gained the heights which nature had clothed in her choicest garments.

''இதோ இப்படித்தான்'' என்று இளவரசன் தன் கூர்வாளை உறையிலிருந்து உருவி சிறைக்கூடத்தின் தரைப்பாகத்தில் சில இடங்களை வாள்முனையால் தட்டிப் பார்த்தான்...''

''மனசுக்குள்ள படிங்க?''

''இந்தத் தொடர்கதை படிக்கறியோ? டாப்பா இருக்குது.''

''இல்லை.''

''ரஜினி மறுபடி நடிக்க வந்துட்டான், தெரியுமா?''

''அப்படியா?''

Sleep then, my child, for your father looks down upon us from eternal pastures.

''தீர சாகசம் புரிந்த வீர இளைஞனே வருக...''

''ரெண்டு ஜாதகமும் என்னமாப் பொருந்தியிருக்குங்கறேள்!''

''சோபனா வாயேன். ரூமுக்குப் போயிரலாம். எத்தனை நேரம் பூவையே பாத்துக்கிட்டு... புஸ்தகம் படிச்சுக்கிட்டு... ரூமுக்கு ஒரு நாளைக்கு நூறு ரூபா கொடுத்துட்டு... கொஞ்ச நேரமாவது இருக்கலாமே!''

அறையில் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான் ரவி.

''என் மீசை உனக்குப் பிடிச்சிருக்கா?''

''ம்.''

''ஸ்டெப் கட்?''

''ம்?''

''இதுக்குன்னே சலூன்ல அஞ்சு ரூபா வாங்கறான்.''

''அப்படியா?''

ரவி தன் உடம்பெல்லாம் பர்ஃப்யூம் அடித்துக்கொண்டான்.

''புடிச்சிருக்கில்ல!''

''ம்!''

''இந்தா, இதை மாத்திக்கிட்டு வந்துரு! பாரிஸ்ல வாங்கினது இது, போ, வெக்கப்படாதே. கட்டின புருசன்கிட்ட என்ன வெக்கம்!''

சோபனா பாத்ரூம் பக்கம் சென்றாள்.

ரவி தன் சட்டையைக் கழற்றினான்.

''சோபனா! சொர்க்கம்னா இதுதான் இல்லையா? இந்த மாதிரி க்ளைமேட்! இந்த மாதிரி ரூம்! இந்த மாதிரி மனைவி! சோபனா! 'நினைத்தாலே இனிக்கும்' கேட்டிருக்கியா?''

''சோபனா...''

''சோபனா...''

ரவி சற்றுக் கவலைப்பட்டு பாத்ரூம் கதவைத் தட்டினான்.

கதவு திறந்துகொண்டது.

சோபனா தரையில் உட்கார்ந்துகொண்டு விசித்து விசித்து அழுது கொண்டு இருந்தாள்.

மலை வாசஸ்தலமான உதக மண்டலத்துக்குக் கல்யாண சீஸ னின்போது தினம் நூறு ஜோடிகள் தேனிலவுக்கக வருகிறார்கள்!



ஒரு பொருந்தாத உறவை இவ்வளவு எளிதாக, ஆழமாக, சுருக்கமாக சொல்லியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. சுஜாதா, தங்கள் இழப்பு மேலும் மேலும் வருத்தமளிக்கிறது.

ஓர் உத்தம தினம் -சுஜாதா



ன்னல் வழியாக ஆதவன் தலையெடுக்கும் முன்னமேயே புல் தரையில் சிறு குழந்தை தவழ்ந்து வருகிறது. களுக்கென்று சிரிக்கிறது. அதனால் நடக்க முடியுமா என்று கவலையாக இருக்கிறது. அதற்குப் பெயர் இருக்கிறது. பறந்து வந்து விளிம்பில் உட்கார்ந்துவிட்டு அறைக்குள் சிற்றடி வைத்து இறங்கி, அவளருகில் வந்து அவள் மார்பைச் சுதந்திரமாகத் திறந்துகொண்டு, ஏங்கி ஏங்கிப் பால் குடிக்க... அதன் சின்ன விரல்கள் அவள் முலையை நெருட... உள்ளுக்குள் திகட்டிய சந்தோஷத்தைக் கலைக்க விருப்பமின்றி இன்னும் இன்னும் என்று ஒரு விளிம்பைத் தொட்டு ஒரு கணத்தில் சகலமும் வெடித்துப் புலனாகி விழித்தபோது, ''நீங்களா?'' என்றாள்.

சத்தீஷ் திருப்திப்பட்ட நிலையில் மல்லாந்து படுத்துக்கொண்டு புன்னகையுடன் தூக்கத்தின் இரண்டாம் பாகத்தைத் துவங்கினான். கஸ்தூரி தன் உடைகளை அவசரமாகச் சரிசெய்துகொண்டு எழுந்து, ஜன்னலைத் திறந்து சில்லென்ற காற்றிலும் சூரிய வெளிச்சத்திலும் முகத்தை அலம்பிக்கொண்டு திரும்பி நிதானமாகக் கணவனைப் பார்த்தாள்.

என் கனவில் புகுந்து என் கனவைக் கலைக்காமல் எனக்குள் நிரம்பிய என் கணவனே!

''எழுந்திருங்க'' என்று தலையைக் கலைத்தாள். அவன் விழித்து அவளைப் பரிச்சயமே இல்லாத புதியவளைப் போலப் பார்த்துப் புன்னகைத்து, ''ஹேப்பி பர்த்டே தில்லு! ம்ம்ம்... உன்னை வாசனை பார்க்கணும், வா!” என்று கையை விரித்து விரல்களால் அழைத்தான்.

''ம்ஹ¨ம். நான் மாட்டேம்பா. எனக்கு எத்தனையோ வேலை இருக்கு.''

''ஒரு தேங்க்ஸ் முத்தம்கூடக் கிடையாதா?''

''கிடையாது.''

டெலிபோன் ஒலிக்க, அதைப் படுக்கையில் இருந்தே எடுத்து ஆன்டெனாவை நீட்டிக்கொண்டு, ''ஹலோ?'' என்று அதட்டினான். சற்று நேரத்தில், ''உனக்குத்தான்'' என்று கொடுத்தான்.

''என்ன எழுந்துட்டியா, ஹேப்பி பர்த்டே'' மஞ்சுவின் குரலை டெலிபோன்கூட அசைக்க முடியாது.

''தேங்க்ஸ் மஞ்சு.''

''உனக்கு என்ன வயசுன்னு கேக்கலை. வயசு முக்கியமா என்ன? இந்த வருஷமாவது பெத்துண்டுடு. ரொம்பத் தள்ளிப் போடாதே."

'மஞ்சு, இன்னிக்குக் காலையில என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒரு கனா கண்டேன். அதை உனக்கு விரிவா சொல்லியே ஆகணும். எப்ப வரே?''

''எப்ப வேணும்னாலும் வரேன். தில்லுவோட பர்த்டேக்கு வராம இருப்பேனா? உன் ஹஸ்பண்ட் என்ன பிளான் வெச்சிருக்கார்னு கேட்டுக்கோ.''

''அவருக்கென்ன... வழக்கம்போல் ஆபீஸ் போவார்.''

சத்தீஷ் படுக்கையிலிருந்தே, ''இல்லை... இல்லை... நாமிருவரும் வெளியே போறோம்'' என்று ஜாடை காட்டினான்.

''மஞ்சு, அவர் எங்கேயோ வெளியே போகப் பிளான் வெச்சிருக்கார்.''

''ஆல் தி பெஸ்ட் தில்லு. போன் பண்ணிட்டு மத்யானம், சாயங்காலம், ராத்திரி எப்பவாவது ஒரு சமயம் வந்து உன் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டுத்தான் போவேன். பை தில்லு! மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்!''

டெலிபோனை வைத்தபோது அது 'டிரிரிக்' என்றது பறவைபோல.

''மஞ்சுதானே! ஒழிஞ்சுதா?''

''சே! இன்னிக்கு யாரையும் திட்டக் கூடாது. அப்படிப்பட்ட நாள் இன்னிக்கு.''

அவளைப் பிடித்து இழுத்துக் கன்னத்தை உரசிக் கூந்தலுக்குள் கை செலுத்தி நிமிர்த்தி, ''ம், என்ன கனா? சொல்லு!'' என்றான்.

''கையெடுங்க. சொல்றேன்.''

''எடுத்தாச்சு.''

''அந்தக் கை.''

''அதுபாட்டுக்கு அது. சொல்லு, என்ன கனா?''

''ஜன்னல் வழியா கிருஷ்ண விக்கிரகம் மாதிரி... ஐயோ, என்ன விஷமம்! நான் சொல்லமாட்டேன்.''

''சரி, இப்ப?'' இடுப்பை வளைத்து அவளைத் தன்னிடம் இழுத்துக்கொண்டு முகத்துக்கு முகம் ஒரு இன்ச் பண்ணிக்கொண்டு ''ம், சொல்லு'' என்று இழுத்தான்.

''ஜன்னல் வழியா தங்கக் கலர் குழந்தை வந்து அப்படியே எம் மேல படிஞ்சு உடம்பெல்லாம் முலாம் பூசினாப்ல குளுகுளுன்னு ஊர்றது.''

''மை டியர் தில்லு! அது குழந்தை இல்லை நானு! வி ஹேடு செக்ஸ்.''

''ச்சே! உங்களைப் போல எல்லாத்தையும் போட்டு உடைக்கிற ஆசாமி கிடையாது.''

இடுப்பின் உடைகளைத் தளர்த்தத் துவங்கவே, விஷயம் கவலைக்கிடமாகும் என்று கஸ்தூரி நழுவி எழுந்து பாத்ரூமுக்குச் சென்றாள்.

பல் தேய்த்து முகத்தில் தண்ணீர் தெளித்துக்கொள்ளும்போதும் உற்சாகம் மிச்சமிருந்தது. ஜன்னலைத் திறக்க வானம் மேகங்களற்று 'விம்' போட்டு அலம்பினாற் போல இருந்தது. கொன்றை மரத்தில் அந்த மாம்பழக் குருவியைப் பார்த்தாள். அவள் பிறந்த தினத்துக்கென்றே தனிப்பட்ட விஜயம் போல் தங்கத் தலையை வைத்துக்கொண்டு, 'ச்சீயோ, ச்சீயோ' என்று தேவதூதனைப் போலக் கூப்பிட வந்திருக்கிறது.

நடுவே, தெளிவாக அந்தக் குருவி அவளைத் 'தில்லு' என்று பெயர் சொல்லி அழைத்ததை கஸ்தூரி எல்லா கோயில்களிலும் சத்தியம் பண்ணுவாள். நிச்சயம் இன்றைக்குப் பிறந்த தினம்தான். எனக்கு மட்டுமில்லை. எனக்குள் உத்தரவாதமாகப் புகுந்திருக்கும் அதற்கும்தான்.

சத்தீசுக்குக் காபி போட்டுக்கொண்டு போர்வையை விலக்கி, அவன் தலையைக் கலைத்து, ''எழுந்திருங்க. ஆபீஸ் போக வேண்டாம்?'' என்று கேட்டாள்.

''இன்னிக்கு ஆபீஸ் லீவு! உனக்குப் பிறந்த நாள் இல்லையா?''

''நாள் முழுக்க வீட்லயா இருக்கப் போறீங்க?''

''வீட்ல இருக்கலாம். வெளியவும் போகலாம். அல்லது ஏ.ஸி. போட்டுட்டுக் கட்டிண்டு படுத்துரலாம். இன்னிக்கு ராணி நீதான்.''

''கோயிலுக்குப் போயாகணும்.''

''ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கு எம்.டி.ஆர். போகலாமா?''

''முதல்ல கோயில். அப்புறம்தான் பாக்கியெல்லாம். ஜெயநகர் போய் அம்மாவையும் சரண்யாவையும் பார்த்துட்டு வந்தே ஆகணும்.''

''சாயங்கால ஃப்ளைட்ல பம்பாய் போறதுக்குள்ளே முடிச்சிரணும்.''

''பாம்பே போறீங்களா? சொல்லவே இல்லையே?''

''போர்டு மீட்டிங். நாளன்னிக்கு மார்னிங் ஃப்ளைட்ல திரும்பி வந்துடுவேன்.''

புதுசாக கார், லாரி வாங்கினவர்கள் எல்லாம் பள்ளத்து பிள்ளையாருக்கு முன் வரிசையாகத் தத்தம் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். மல்லிகையும், அகர்பத்தியும், பட்டுப் புடவையும், இளங் காலையும், விபூதியும் கலந்து ஆரோக்கியமாக வாசனை அடித்தது. சத்தீஷ் பாசாங்கோடு மனைவியைக் கவனித்துக்கொண்டு இருந்தான். கஸ்தூரி வேண்டிக் கொண்டாள்.

''கடவுளே! ஏன் இத்தனை உத்தமமான தினம்?''

''இந்தாம்மா புஷ்பம்'' என்று ஒரு சிறுவன் பளிச்சென்று திருநீறும் இந்த வயசுக்கு வேஷ்டியுமாக வந்து கொடுத்துச் சிரித்தான்.

பிளாட்ஃபாரத்தில் நடக்கையில், ''எல்லாமே நல்லபடியாக இருக்கு. காலங்கார்த்தால அந்தக் கனா, அந்தக் குருவி என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட்டது, இந்த அழகான பையன்....'' என்று கூறினாள்.

''த பாரு, இன்னி முழுக்கவே இப்படித்தான். சொல்லிண்டிருக்கப் போறியா? மஞ்சள், குருவி, கிருஷ்ண விக்கிரகம், விநாயகர் பிரத்தியட்சம், இப்படி...?''

''நிச்சயம் எனக்கு இன்னிக்கு என்னமோ ஆயிருக்கு. உடம்பு பூரா பதர்றது.''

மாருதியில் ஏறிக்கொள்ள, ''தில்லு, உலகத்திலேயே ரொம்ப சுலபமான விஷயம் எது தெரியுமா?'' என்று கேட்டான்.

''தெரியும், சொல்ல வேண்டாம்.''

''யு வான்ட் தி சைல்டு இல்லையா? வேணும்னா சந்தேகத்துக்கு சாம்பாரா வீட்டுக்குப் போய் இன்னுமொரு முறை ஊர்ஜிதம் பண்ணிரலாமா?''

''சே, புத்தி போறதே!''

ஜெயநகரில் மணிப் பொத்தானை அழுத்தியபோது சத்தீஷ், ''இதோ பாரு! அரை மணி, அதுக்கு மேல் அரட்டை கிடையாது'' என்று கிசுகிசுத்தான். கதவு திறக்க, ''ஹலோ, கர்னல்!''

அப்பாவைத் தாரிணியின் குழந்தைகள் உள்பட எல்லோரும் 'கர்னல்' என்றுதான் கூப்பிடுவார்கள்.

கஸ்தூரியைப் பார்த்ததும் கட்டிக்கொண்டு உச்சியில் முத்தம் கொடுத்து, ''ஓ மை ஸ்வீட் தில்லு, ஹேப்பி பர்த்டே'' என்றார்.

''தேங்க்யூ கர்னல்.''

''இங்கிலீஷ் தேதிப்படி லெவன்த் செப்டம்பர், இன்னிக்கு உனக்கு 25. நீ பிறந்தப்ப விஜயவாடா டூர் போயிருந்தேன் கிருஷ்ணா ரிவர்ல வெள்ளம் அதிகமாயி ரயில் எல்லாம் குளோஸ் பண்ணிட்டான். டக்கோடா ஃப்ளைட்டைப் பிடிச்சுக் காலங்கார்த்தால வந்துட்டேன். தில்லு டியர்! பெரி யாழ்வார் பாசுரம் சொல்லிண் டிருக்கியா?''

''தவறாம! தினம் பெரியாழ்வாருக்காகத்தானே நான் எழுந்திருக்கிறேன்'' என்றான் சத்தீஷ்.

''தட்ஸ் மை கேர்ள். சின்ன வயசிலேயே நாலாயிரமும் ஒப்பிப்பா. மாப்பிள்ளை, இவ முழுப் பேர் கஸ்தூரி திலக்கா. நாங்க எல்லோரும் தில்லுன்னுதான் கூப்பிடுவோம். கஸ்தூரின்னு பேர் எப்படி வந்ததுன்னு தெரியுமா?''

''கர்னல் இதை என்கிட்டேயே முப்பது தடவை சொல்லியாச்சு'' என்றான் சத்தீஷ்.

கஸ்தூரி, கணவனை முறைக்க... அவன் கடிகாரத்தைச் சுட்டிக் காட்டினான். ''வர்றோம் கர்னல்'' என்றான்.

''சேச்சே, லஞ்ச் சாப்பிட்டுட்டுதான் போறீங்க!''

''தேர் கோஸ் மை எம்.டி.ஆர்.''

''அம்மா, நீங்க சும்மாருங்கோ. அவா வேற ஏதாவது பிளான் போட்டு வெச்சிருப்பா'' என்று இடைமறித்தாள்.

அம்மா தனியாகக் கூப்பிட்டு, ''இன்னும் குளிக்கிறியா?'' என்றாள்.

''ஆமாம்மா.''

''எல்லாம் போறும். அப்புறம் நாளாயிருந்துன்னா பிற்காலத்தில் வளர்க்கிறது கஷ்டம். இந்தப் புரட்டாசிக்கு இருபத்தஞ்சு முடிஞ்சுர்றது உனக்கு.''

அப்பா வந்து, ''தில்லு, மாப்பிள்ளை டூர் போறாராமே. இங்கே வந்து இரேன்?'' என்றார்.

''இல்லைப்பா, ராத்திரி துணைக்கு வேலைக்காரப் பொண்ணு வரும். செக்யூரிட்டி இருக்கு. சௌக்கிதார் இருக்கான்.''

''எங்காத்திலெல்லாம் வந்து படுத்துப்பியா, ரிச் கேர்ள்.''

''அப்படி இல்லைப்பா. இவர் இல்லாதபோதுதான் வீட்டை ஒழிக்க முடியும்.'' முக்கிய காரணம் அதில்லை. தனியாக வீடியோ பார்க்க வேண்டும் என்று தில்லு தீர்மானித்துவிட்டாள்.

ரேஸ் கோர்ஸ் வழியாக ஆபீசுக்கு வந்து பதினைந்து நிமிஷம் என்று சொல்லிவிட்டுச் சென்றான். பேண்ட் வாத்தியமும் பொய்க்கால் குதிரையுமாக கணேசா ஊர்வலம் ஏரியில் முங்குவதற்காக டெம்போவில் சென்றுகொண்டு இருக்க, பொய்க்கால் குதிரைக்காரன் கூலிங் கிளாசும், பொய்த் தாடியும், ஜிகினா ஜிப்பாவுமாக அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனான்.

சத்தீஷ் திரும்பி வந்து, ''முக்கியமா மூணு ஃபைல் பார்த்துட்டேன். ஏர் டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிடுத்து. சாயங்காலம் வரை நாம ஃப்ரீதான். எங்கே போகணும் சொல்லு?'' என்றான்.

''எங்கேயாவது!''

''சரி லெட்ஸ் கோ டு 'எங்கேயாவது'....''

ஸோஃபியா கான்வென்ட்டின் ஆரோக்கியமான 'ஹன்'களும் கூட்டம் கூட்டமாகச் சட்டை அணிந்த ஆயிரம் உற்சாகப் பெண்களும்... நீச்சல் குளத்தில் உன்னதமாகக் குதித்த ஒரே இளைஞன். மரத்தடியில் டிராஃபிக் சந்தடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்த உழைப்பாளி. கீரை விற்றுக்கொண்டு இருந்த கறுப்புப் பெண்ணின் அருகில் சாக்கின் மேல் தூங்கிக்கொண்டிருந்த தேவதைக் குழந்தையின் அரைஞானில் முடிந்திருந்த தாயத்து. இந்த சுசுகியில் ஒரே மாதிரி ஜீன்ஸ் அணிந்து பையனும் பெண்ணும் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள் என்னைப் போல.... என்னைப் போல.

ஏன் இந்தத் திகட்டும் சந்தோஷம்? விண்ட்சர் மேனரில் ஐஸ்க்ரீம் புடிங் வகைகளிலேயே பத்து தினுசு சாப்பிட்டாள். பெங்காலி போலிருந்த இளைஞன் சின்தஸைஸர் டிரம் அடிக்க... மைக்கை முழுங்குகிற மாதிரி வைத்துக்கொண்டு ஸ்டீவி வாண்டர் பாடினான்.

மிக அழகான ஒரு வெயிட்டர் இளைஞன் அவளருகில் பூச்செண்டு கொண்டுவந்து, ''மேடம்! ஹேப்பி பர்த்டே'' என்றான். ஆச்சர்யப்பட்டு சத்தீஷைப் பார்க்க, அவன் மனோகரமாகக் கண்ணடித்தான். அந்த மலர்க் கொத்து செலஃபன் தயவில் புதுசு கலையாமல் அவளை அணைத்துக்கொண்டது. பக்கத்து டேபிள் குண்டுகுழந்தை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது. இவள் 'வா' என்று அழைத்ததும் ஓடி வந்துவிட்டது.

''பிங்க்கு பேட்டே இதர் ஆவோ.''

'லேஸ் மேக்கர்' போக வேண்டாம் என்று கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் லைப்ரரியில் உலவிவிட்டு, ஒரு கவிதைத் தொகுப்புடன் வெளியே வந்து, மண்டபத்தின் அருகில் மர அடர்த்தியின் கரும் பச்சை நிழலில் ஒரு பெஞ்ச் காலியாக இருக்க, அதில் அவள் உட்கார்ந்துகொள்ள அவள் மடி மேல் தலைவைத்து,

''ஜென்னி கிஸ்ட் மீ படிக்கட்டுமா?''

''படிங்க.''

''ஜென்னி என்னை முத்தமிட்டாள் சட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்து வந்து! காலம் என்னும் கள்ளனே! உன் பட்டியலில் எத்தனையோ இனிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள விரும்புகிறாயே, இதையும் சேர்த்துக்கொள். நான் களைத்திருக்கிறேன் என்று சொல். நான் சோகமாக இருக்கிறேன் என்று சொல். ஏழை என்று சொல். உடல் நலமில்லை என்று சொல். வயசாகிக் கொண்டிருக்கிறேன் என்று சொல். ஆனால், ஜென்னி என்னை முத்தமிட்டாள் என்பதையும் சொல்.''

பிற்பகலின் அமைதியில் தூரத்தில் நகரத்தின் சந்தடி கேட்க மடி மேல் கணவனை அமைதியாக அழுத்திக்கொண்டு அவன் முகத்தையே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள். நிச்சயம் இன்றைக்குத்தான் நிகழ்ந்திருக்கிறது!

இரண்டு நாளுக்காக மெத்தென்ற பெட்டியில் அவன் சூட், வெள்ளை வெளேர் சட்டைகள், அவன் மாத்திரைகள், ஷேவிங் சாதனங்கள், ஆஃப்டர் ஷேவ் லோஷன், தங்க விளிம்பிட்ட சீப்பு, ஆண் பிள்ளை கர்ச்சீப், அவன் ஃபைல்கள் எல்லாவற்றையும் அடுக்கிவைக்கையில், குறும்பாகத் தன்னுடைய 'ப்ரா' ஒன்றையும் இடையில் செருகி மூடினாள்.

பம்பாய் ஃப்ளைட் எட்டரைக்குத்தான் கிளம்பும் என்றார்கள். பேப்பர் கப்பில் சத்தீசுடன் காபி சாப்பிட்டுவிட்டு இருவரும் புத்தகம் பார்த்தார்கள். ஏர்போர்ட் ஜனங்களை வேடிக்கை பார்த்தார்கள். குல்லாயும், தொப்பியும், குங்குமமும், இடது பக்கம் ஸாரியும், அரசியலும், சூட்டும் கோட்டும், வெற்றியும், சவரம் செய்த பச்சை முகங்களும், நாசூக்கான அழுகைகளும்...

''நான் களைத்திருக்கிறேன் என்று சொல், ஏழை என்று சொல், உடல் நலமில்லை என்று சொல், வயசாகிக்கொண்டிருக்கிறேன் என்று சொல், சத்தீஷ் என்னை முத்தமிட்டான் என்பதையும் சொல்.''

செக்யூரிட்டி கேட்டில் நுழையுமுன் சத்தீஷ் திரும்பிக் காற்றில் 'கேஸி' என்று வரைந்துகாட்ட, அதன் அந்தரங்க அர்த்தம் அவள் கன்னங்களில் ரத்தம் பாய, கண்ணாடிக்குப் பின்னாலிருந்து சின்னதாக நாலு விரல் டாட்டா காட்டிவிட்டு மறைந்தான்.

மாருதியை பேஸ்மென்ட்டில் நிறுத்திவிட்டு, கதவைத் தன் சாவியால் திறந்து உள்ளே வந்து உடை மாற்றி, படுக்கையறைக்குச் சென்று, பசியின்றி ஒரு சாண்ட்விச் தயாரித்து, 'விசிஆரை' இணைத்து, கல்யாண கேஸட்டை நுழைத்து, ரிமோட் கன்ட்ரோலை எடுத்து, மூன்று தலையணைகள் அமைத்து, விளக்கைத் தணித்துவிட்டு, 'ப்ளே' பொத்தானை அழுத்தினாள்.

எதிரே டெலிவிஷன் திரையில் மறுபடி சத்தீஷைக் கல்யாணம் செய்துகொள்ள ஆரம்பித்தாள். சத்தீஷ் சின்னப் பையன் போல கன்னத்தில் மை, நெற்றியில் அலையும் தலைமயிர், மஞ்சள் சரிகை வேட்டியில் பஞ்சகச்சம், அசௌகரியத்தில் வாத்தியாரைக் கனவுக் கண்களுடன் பார்த்துக்கொண்டே, அவ்வப்போது சாஸ்திரத்துக்கு மந்திரம் சொல்ல, கண்கள் மையிட்ட கண்கள் அலைய சத்தீஷ் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

நெற்றியில் அம்மா அவனுக்குப் பொட்டு இடுகிறாள். அத்தை, சித்தி, தாரணி, பேபி அம்மா எல்லாரும் மஞ்சள் நீரை இறைத்துக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். கால் அலம்பிப் பாய் மேல் வைக்கிறார்கள். சத்தீஷ் கட்டை விரலைப் பிடித்துப் படிப் படியாகச் சம்பந்தாசம்பந்தமில்லாமல் பேசுகிறான். என்னைவிட சத்தீஷ்தான் நெர்வஸ்.

கர்னலின் மடியில் உட்கார்ந்திருக்க என்னை நெற்றியில் எங்கோ பார்க்கிறான். தாலி கட்டிய பின் அம்மாவின் கண்களில் கண்ணீர். எல்லோருமே கட்டிப் பிடித்துக்கொண்டு, கை குலுக்கிக்கொண்டு, இது என்ன புது வழக்கம்?

ரிசப்ஷனில் ஜெயராமன் கச்சேரியில் சிமென்ட் கலர் சூட்டு போட்டு நிற்க, மத்தியானத்திலிருந்து ப்யூட்டீஷியன் எனக்குச் செய்த அலங்காரம் எனக்குப் பிடிக்கவே இல்லை. ஏதோ விக்ரமாதித்தன் பதுமை மாதிரி, அலுங்காமல் ஆயில் மேக் அப் என்று எண்ணெய் வழிந்துகொண்டு...

வீடியோ முடிந்து கீற்றல் வந்த பின்னும் சற்று நேரம் திரையையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் அணைத்தாள்.

''அன்புள்ள கடவுளே, நான் உனக்கு எப்படி இந்த மகத்தான, உத்தமமான தினத்துக்கு வந்தனம் சொல்ல வேண்டும்? ஏன் இத்தனை சந்தோஷம்? ஏன் இத்தனை வெளிச்சம்? ஏன் இத்தனை உற்சா கம்? ஏன் இப்படி ஒரு ஸ்படிக சுத்தமான தினம்? தயவுசெய்து இதற்கு மேல் சந்தோஷம் தராதே. தாங்காது. எனக்கு இது போதும். இது போதும்!''

கஸ்தூரி தூங்கிப் போய்ப் பத்து நிமிஷத்தில் டெலிபோன் ஒலித்தது!