
09. வீட்டுக்கு வந்த நண்பர்களுடன் வெளியே கெத்தாக கிளம்பும் போது அவர்களுக்குத் தெரியாமல் 'போனா.. தொலைச்சுப்புடுவேன்' என்று மிரட்டும் முகபாவம்.
08. அரிதான இரவு நேர பால்கனி தருணங்களில் நீண்ட கெஞ்சல்களுக்குப்பிறகு கிடைக்கும் ஒற்றை சிகரெட்டுக்கான அனுமதி.
07. 'மையி வெச்சா எனக்கு நல்லாருக்குமாங்க?' பதிலை எதிர்பாராமல் ஒரு சிறுமியின் ஆசையோடு மெலிதாக மை தீற்றிக்கொள்ளும் கண்கள்.
06. 'எல்லா மண்ணாங்கட்டியும் நினைவிலிருக்குது, இத்தன பூக்கடை கண்ணு முன்னாடி இருந்தும் இந்தப் பூ வாங்குறது மட்டும் எப்படி மறந்துபோகுது இந்த மரமண்டைக்கு?' என்று அரற்றும் கோபம்.
05. ஸ்கேல் வைத்து அளந்து மடித்ததைப்போன்ற படுகச்சிதமான உன் முந்தானை மடிப்புகள்.
04. கடும் சண்டைக்குப் பின்வரும் இரவு உணவின் போது சுவற்றைப் பார்த்தவாறே நீ கேட்கும் 'மிளகாப்பொடி போதுமா? சட்னி அரைக்கணுமா?' மிளகாய் வார்த்தைகள்.
03. பட்டுச்சேலை வாங்கப்போனாலும், பிளாஸ்டிக் குடம் வாங்கப்போனாலும் கடைக்காரர்களை ஏற்றத்தாழ்வு பார்க்காமல் நீ செய்யும் ஒரே மாதிரியான டார்ச்சர்.
02. 'ஒழுங்கா கம்ப்யூட்டர் கத்துக்கோ' வேலைகள் முடிந்து படுக்கும் நேரங்களில் வலுவாய் பிடித்து உட்கார வைத்து கற்றுத்தரும்போது, 'ப்ளீஸ்ங்க, நாளைக்கு பாக்கலாமே.. ஆவ்வ்வ்..' என்று வெளியாகும் கொட்டாவி.
01. ஸ்டிக்கர் பொட்டுகளே எப்போதும் உன்னை அழகு செய்துகொண்டிருந்தாலும் எப்போதாவது ஸ்டிக்கருக்குக் கீழே நீ தீற்றிக்கொள்ளும் குங்குமம்.
Thnaks to http://www.parisalkaaran.com/
5 comments:
Interesting. But it won't suit everyone.
You asked me to write a love story ending in tears. I wrote one recently. You still didn't read it.
awaiting for your comments.
of course!!! i asked u to write a true friendship only.anyway i like love story also.definitely i will read and comments.
Thanks
periya rasanaikaarar pola irukkirathu. sorry for the tamingilish.
ஐயோ நீங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கு
உங்களின் எழுத்துக்கு நான் ஒரு அடிமை என்றே சொல்லலாம்
அந்த பூனை பற்றி உங்களின் பதிவு மனதை வருடியது!!!!
பொதுவாக பூனையின் மீது ஒரு மதிப்பே வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
நன்றி உங்களின் வருகைக்கு!!!!
தொடர்ந்து எழுதுங்கள்
Kalakkura nanbaa....
கருத்துரையிடுக